விளையாட்டு

ஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா

ஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா

webteam

 லண்டனில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்ற ஒட்டபந்தய வீரர்களுக்கு உண்ணக்கூடிய வகையிலான தண்ணீர் வழங்கப்பட்டது.

லண்டனில் உள்ள ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற நிறுவனம் ஜெல் வடிவத்தில் தண்ணீரை தயாரித்திருக்கிறது. உபயோகப்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் தண்ணீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் போன்றவை சுற்றுச்சூழலைக் கெடுப்பதால் அதற்கு மாற்றாகவே இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்களின் சவ்வுப்பகுதிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜெல் வாட்டருக்கு ஓஹோ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த புது முயற்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டும், நெகிழி பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் லண்டனில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு உண்ணக்கூடிய தண்ணீர் வழங்கப்பட்டது. பந்துபோன்ற தோற்றமுடைய ஓஹோ காப்ஸ்யூல்கள் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.