விளையாட்டு

’உங்களுக்கு ராஞ்சியிலும்...’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு சாக்‌ஷி தோனி பதில்!

’உங்களுக்கு ராஞ்சியிலும்...’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு சாக்‌ஷி தோனி பதில்!

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி, ஹர்திக் பாண்ட்யாவுக்கு இனிமையான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பின்பு, தோனி இந்தியாவுக்காக இன்னும் களமிறங்கவில்லை.

அதே போல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு அண்மையில் லண்டனில் அறுவை சிகிக்சை நடந்தது.

ஓய்வில் இருக்கும் பாண்ட்யா மருத்துவமனையில் இருந்தவாறே அறுவை சிகிச்சை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்களின் ஆசிர்வாதங்களுக்கு நன்றி. விரைவில் திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் அவர் மகள் ஜிவாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் ஜிவாவை குறிப்பிட்டு "நான் இந்த சிறுமியை மிஸ் செய்கிறேன், பெரியவரையும் கூட (தோனியை குறிப்பிட்டு)" என பதிவிட்டிருந்தார். அதற்கு பல ரசிகர்கள் நாங்களும் மிஸ் செய்கிறோம் என பதிலளித்திருந்தனர்.

இந்நிலையில், தோனி மனைவி சாக்‌ஷி, ‘உங்களுக்கு ராஞ்சியிலும் (தோனி ஊர்) வீடு இருப்பது தெரியும். சரியா?’ என்று தெரிவித்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா, ‘எனக்குத் தெரியும். நன்றி சாக்‌ஷி’ என்று கூறியுள்ளார்.