பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் காதல் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கிறது.
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். சுமார் 20 பட்டங்களை வென்றுள்ள இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இவரும் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பும் ஐதராபாத் தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை இருவ ரும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், இப்போது உறுதி செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் டிசம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்துள்ளனர். இதில் நெருங்கிய உறவினகள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.
இதுபற்றி சாய்னா நேவால் கூறும்போது, ‘2007- 2008 ஆம் ஆண்டு முதல் காஷ்யப்பை காதலித்து வருகிறேன். போட்டி நிறைந் த உலகில் ஒருவருடன் நெருக்கமாவது கடினம். நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் நெருங்கி பேசினோம். காதலை குடும்பத்தின ரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வார் கள். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் காதலை புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்துள் ளார்.
‘டிசம்பர் 20 ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் வேறு தேதி கிடைக்கவில்லை. அதனால் டிசம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம்’ என்றார் சாய்னா.