விளையாட்டு

ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் சுழல் அஜ்மல் !

ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் சுழல் அஜ்மல் !

webteam

பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழல் பந்துவீச்சாளர் அஜ்மல். உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்த இவர், 2012-ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது  பந்துவீச்சு முறை பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐசிசி விதிமுறைக்கு ஏற்ப, இவரது பந்துவீச்சு அமையாததால் 2014ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டார். பந்துவீச்சு முறையை மாற்றிக் கொண்ட பின் 2015-ல் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் இவரது பார்ம் கேள்விக்குறியானதை அடுத்து, ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். 

அவர் கூறும்போது, ‘அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும், தேசிய டி20 போட்டிக்குப் பின் (இம்மாத இறுதி) ஓய்வு பெறுகிறேன். அணியின் வெற்றிக்கு பல முறை உதவியிருக்கிறேன். திருப்திகரமாகவே ஓய்வு பெறுகிறேன். எனது பந்துவீச்சு முறை தடை செய்யப்பட்டது என்னைக் காயப்படுத்தியது’ என்றார். 

இந்தியாவுக்கு எதிராக 2008-ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் அறிமுகமான அஜ்மல், 113 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.