விளையாட்டு

இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த புதுவியூகம்: மோர்னே மோர்கல்

இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த புதுவியூகம்: மோர்னே மோர்கல்

rajakannan

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த புதிய அணுகுமுறையை கையாள உள்ளதாக தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கூறியுள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்ரிக்கா சென்றுள்ளது. மும்பையில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர்கள் நேற்றிரவு கேப்டவுன் நகர் சென்றடைந்தனர்.  இந்தியா- தென்ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த புதிய அணுகுமுறையை கையாள உள்ளதாக மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியின் ஒருநாளின் கடைசி பகுதி  ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மை கடினமாக மாறிவிடும். தேனீர் இடைவெளிக்கு பிறகுதான் ரன்கள் அதிகம் சேர்க்க முடியும். அதனால் கடைசி பகுதியை குறிவைத்து இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவோம்” என்றார். 

டேல் ஸ்டெயில் ஓய்வில் இருந்தக் காலத்தில் மோர்கல் தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.