விளையாட்டு

400 கிலோ எடை... - பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த சோகம்!!

400 கிலோ எடை... - பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த சோகம்!!

JustinDurai
400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும்போது வீரரின் முழங்கால் சவ்வு கிழிந்தது
ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்ற வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில், 400 கிலோ எடை பிரிவு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.
அப்போது 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும்போது முழங்கால் முறிந்ததால் அலெக்சாண்டர் வலியில் துடிதுடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்கால்களை சவ்வுகளை இணைக்க ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொள்ள அலெக்சாண்டரை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவர் மீண்டும் நடக்கும்போது கால்களை வேகமாக அசைக்காமல் நடக்க வேண்டியதிருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அலெக்சாண்டர் செடிக் பழையபடி பளுதூக்க முடியுமா என்பது இரண்டு மாதத்திற்குப் பிறகே தெரியவரும் என்று டாக்டர்கள் கூறினர்.