விளையாட்டு

இஷாந்த், மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சு - 115 ரன்னில் சுருண்ட ராஜஸ்தான்

இஷாந்த், மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சு - 115 ரன்னில் சுருண்ட ராஜஸ்தான்

webteam

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் களமிறங்கினர். 

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரஹானே 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டனும் 13 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் மஹிபாலும் 8 ரன்களுடன் இஷாந்த் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி முதல் 6 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பறி தவித்தது. 

இதனையடுத்து ஸ்ரேயஸ் கோபால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் சற்று நிதனமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்க முற்பட்டனர். 10 ஓவர்களில் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது. எனினும் 12வது ஓவரில் ஸ்ரேயஸ் கோபால்(12) அமித் மிஸ்ரா சுழலில் ஆவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே பின்னி ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அவரைத் தொடர்ந்து கௌதம் வெறும் 6 ரன்களுடன் மிஸ்ராவின் சுழலில் அவுட் ஆனார். ஒரு புறம் விக்கெட் சரிந்த வண்ணம் இருக்க,  மறுபுறம் ரியான் பராக் மட்டும் நிலைத்து ஆடிவந்தார். அவரின் ஆட்டத்தால் டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் ஈஷ் சோதி 6 ரன்களுடன் பவுல்ட் பந்துவீச்சில் வெளியேறினார். 

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் 2சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் பவுல்ட் 2 விக்கெட் சாய்த்தார்.