விளையாட்டு

'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' ?

'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' ?

கரணம் தப்பினால் மரணம் என்ற பீதியில் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள். ஆம், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் தொடர் விளையாடுவதற்கு முன்பாக அவர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்த "யோ-யா" எனும் டெஸ்ட் வைக்கிறது.

இந்த உடற்தகுதி சோதனையில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு வீரரால் இந்திய அணிக்காக தொடரில் விளையாட முடியும். ஏற்கெனவே வைக்கப்பட்ட யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் தகுதி பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று யோ யோ டெஸ்ட்டில் பங்கேற்கவுள்ளார். இதில் ரசிகர்களால் "ஹிட் மேன்" என அன்புடன் அழைக்கப்படும் ரோகித் சர்மா 16.3 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யோ யோ டெஸ்ட்டில் இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே ரோகித் சர்மாவால் இந்திய அணிக்காக விளையாட முடியும். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர்.

இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க தகுதிப்பெற்றனர்.ரோகித் சர்மா யோ யோ டெஸ்ட்டில் பெயிலாகும் பட்சத்தில், அவருக்கு பதிலாக ரஹானே அணிக்கு திரும்ப ரெடியாக உள்ளார்.