விளையாட்டு

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: போபண்ணா இணை இறுதிக்கு முன்னேற்றம்

webteam

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - குரோஷியாவின் இவான் டோடிக் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் போபண்ணா - இவான் டோடிக் இணை, அமெரிக்காவின் ராஜீவ் ராம் - தென்னாப்ரிக்காவின் ரேவன் கிளாசன் இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது.

விறுவிறுப்பு நிறைந்த போட்டியில், 4-6, 7-10, 11-9 என்ற செட் கணக்கில் போபண்ணா இணை போராடி வென்றது. இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் - நிக்கோலஸ் மகுட் இணையை எதிர்த்து போபண்ணா - இவான் டோடிக் இணை விளையாட உள்ளது.