ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளும் கிராண்ட்ஸ்லாம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், மரின் க்லிக் ஆகியோர் மோதிக்கொண்டனர்.
பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் 6-2, 6-7, (5-7), 6-3, 3-6, 6-1, என்ற செட் கணக்குகளில் ரோஜர் ஃபெடரர், மரின் க்லிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்முலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் வென்ற 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.