விளையாட்டு

ரோஜர் ஃபெடரருக்கு லாரல்ஸ் விருது !

ரோஜர் ஃபெடரருக்கு லாரல்ஸ் விருது !

webteam

லாரல்ஸ் விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் சிறப்பாக செயல்படும் நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் லாரல்ஸ் விருது வழங்கப்படும். இது, விளையாட்டு உலகின்  ஒரு 'ஆஸ்கர்' விருது போல் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்ற ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையே கடும் போட்டி காணப்பட்டது. இருப்பினும் இந்த விருதை ரோஜர் ஃபெடரர் தட்டிச்சென்றுள்ளார். 

2017ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் விம்பிள்டன் ஓபனில் இவர்

 இரண்டு முறை லாரல்ஸ் விருதை  கைப்பற்றி இருந்தார்.  அதன் பின் அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்த ஃபெடரர், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி வெற்றியை தன் வசப்படுத்தைனார். இதனால், இந்த ஆண்டுக்கான 'மீண்டு வந்த வீரர்' என்ற லாரல்ஸ் விருது இவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், லாரல்ஸ் விருதை அதிக முறை வென்ற நட்சத்திரம் என்ற சாதனை எட்டினார். இதற்கு முன், 2005, 06, 07 ,08 என தொடர்ந்து 4 முறை 6 விருதுகளை கைப்பற்றி இருக்கிறார். ரோஜர் பெடரர் கூறுகையில்,'' ஒரே ஆண்டில் இரண்டு லாரல்ஸ் விருதை வென்றதை கெளவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.