விளையாட்டு

ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்ஸ் வேர்ஸ்டபன்

ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்ஸ் வேர்ஸ்டபன்

webteam

2022-ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றார் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வேர்ஸ்டபன்.

ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை 22 சுற்றுகள் கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது, 2022ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை துவக்கம் முதல் ரெட்புல் மற்றும் பெராரரி அணிகளை சார்ந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக ஃபார்முலா ஒன் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெர்சிடிஸ் அணி இந்த ஆண்டு பெரிய அளவில் சோபிக்கவில்லை.

22 போட்டிகள் இந்த தொடரில் தற்போது வரை 18 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வேர்ஸ்டபன் 366 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் பெரஸ் 253 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், பெராரரி அணி வீரர் சார்லஸ் லேக்லர்க் 252 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தொடர் முடிவதற்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் அடுத்த நான்கு போட்டிகளிலும் மேக்ஸ் வேர்ஸ்டபன் தோல்வி அடைந்தாலும் அவரை புள்ளி பட்டியலில் யாரும் தாண்ட முடியாது என்பதால் 2022ஆம் ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மேக்ஸ் வேர்ஸ்டபன் வென்றார்.

இதேபோல சிறந்த அணிக்கான புள்ளி பட்டியலிலும் ரெட்புல் அணி 619 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளதால் இந்த ஆண்டு ரெட்புல் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வெல்ல உள்ளனர்.

இதையும் படிக்க: மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி