விளையாட்டு

6 வயது சிறுமியின் அபார பேட்டிங் : வியந்துபோன ஆர்.சி.பி இயக்குநர்

6 வயது சிறுமியின் அபார பேட்டிங் : வியந்துபோன ஆர்.சி.பி இயக்குநர்

webteam

புனேவை சேர்ந்த 6 வயது சிறுமியின் அபார பேட்டிங்கை கண்டு ஆர்.சி.பி இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் வியப்படைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. இதனால் அனைத்து வீடுகளும் குழந்தைகளின் சுட்டித்தனத்தால் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய விளையாட்டுகளின் பக்கம் குழந்தைகள் திரும்பியுள்ளனர். பல வல்லுநர்களும் குழந்தைகளை விளையாட அனுமதிக்குமாறும், அவர்களை போனில் மூழ்கடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் புனேவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பேட்டிங் திறமையால் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். பல கிரிக்கெட் வீரர்கள் இவரது பேட்டிங் திறனைக் கண்டு வியந்துள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் இயக்குநருமான மைக் ஹெஸ்ஸென் வியப்படைந்துள்ளார்.

அத்துடன் சிறுமி தனது சகோதரர்களுடன் பேட்டிங் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தச் சிறுமியின் பெயர் ஸ்வாரா குரவ் எனவும், அதனை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரபல கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் இந்தச் சிறுமியைப் பாராட்டியுள்ளனர்.