விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை பட்டியல்: அஸ்வினை முந்திய ஜடேஜா

webteam

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்தார்.

அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்திருந்த ஜடேஜா, ராஞ்சி டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அஸ்வின் 2ஆவது இடத்துக்குப் பின்தங்கினார். இந்தப் போட்டியில் இரட்டை சதமடித்த புஜாரா, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதில், ஆஸ்திரேலிய கேப்டம் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார்.