விளையாட்டு

ரஷித்கான் அபாயகரமானவர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்!

ரஷித்கான் அபாயகரமானவர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்!

webteam

ஆப்கானிஸ்தான் அணியில், சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் லால்சந்த் ரஜ்புத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆப்கான் சுழல்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முஜிப் ஆகியோர் மிரட்டினார்கள். ரஷித்கான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஆப்கான், இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி னார் ரஷித் கான். அடுத்தப் போட்டியில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் 14-ம் தேதி விளை யாடுகிறது. 

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டி பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் ஆப்கானிஸ்தான் அணியின் 2016-17-ம் ஆண்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தவருமான லால்சந்த் ரஜ்புத் கூறும்போது, ‘பெங்களூர் பிட்ச், பந்து நன்றாக திரும்பும் நிலையில் அமைக்கப்பட்டால் நமக்கு சிரமம்தான். ஏனென்றால் ரஷித்கான் அபாயகரமான சுழல் பந்துவீச்சாளர். ஆப்கான் ஸ்பின்னர்கள் அதில் நன்றாக சாதிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அணியில் குறைந்தபட்சம் மூன்று நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ரஷித்கான் பந்தை வேகமாக அடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி அடித்தால் விக்கெட்டை இழக்க நேரிடும். முன் கால்களை நகர்த்திதான் (front foot)  ஆட வேண்டும். பின்பக்கம் கால்களை நகர்த்தக் கூடாது. அதோடு அவர் பந்தில் சிங்கிளாக எடுக்க வேண்டும்’ என்றார்.