விளையாட்டு

டி20-யில் 8 ஆயிரம் ரன்: சுரேஷ் ரெய்னா சாதனை

டி20-யில் 8 ஆயிரம் ரன்: சுரேஷ் ரெய்னா சாதனை

webteam

டி20 கிரிக்கெட் போட்டியில், 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை, சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேசம்-புதுச்சேரி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச் சேரி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் உ.பி அணிக்காக விளையாடிய, சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர், 12 ரன்னை எட்டிய போது டி20 கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் சேர்த்து) 8 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 300-வது டி20 போட்டியில் ஆடியுள்ள அவர், 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் டி20 போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் 6-வது இடத்தில் உள்ளார்.

இந்திய கேப்டன் விராத் கோலி 251 போட்டிகளில் விளையாடி 7,883 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் இருக்கிறார்.