விளையாட்டு

சவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

சவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

jagadeesh

இங்கிலாந்து நாட்டில் சவுத்தாம்டன் நகரில் மழை பெய்து வருவதால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை சேர்த்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே அரை சதமடித்தார். இதில் மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஏற்கெனவே இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை நாள் ஆட்டம் தடைப்பட்டதால், சவுத்தாம்டனில் 2ஆம் நாள்தான் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. பின்பு தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டமும் நடைபெற்றது. ஆனால் விளையாடப்பட்ட 2 நாள்களிலும் மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 4ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவுத்தாம்டனில் மழை தலைக்காட்டியுள்ளது. இதனால் இன்றையப் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றித் தோல்வி முடிவுகள் தெரிய ரிசர்வ் நாள் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 2 நாள்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.