விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை

மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தலா ரூ.13 லட்சம் ஊக்கத்தொகை

webteam

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரயில்வே துறையில் பணிபுரியும் 10 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தலா 13 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு மத்திய அரசின் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீராங்கனைகளில் 10 பேர் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்கள். எனவே, அவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் தலா 13 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். 

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.