சமித் டிராவிட் எக்ஸ் தளம்
விளையாட்டு

இந்தியா U19| ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்!

Prakash J

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இந்திய யு19 அணி விளையாடவுள்ளது. செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற இருக்கும் இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணிக்கு முகமது அமன் கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு சோஹம் பட்வர்தன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இரண்டு தொடர்களிலும் இடம்பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் அறிமுகம் ஆனார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் சமித், மிதவேக பந்துவீச்சாளராகவும் உள்ளார்.

இதையும் படிக்க: ரத்து செய்யப்பட்ட பிரஷர் குக்கர்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்த அமேசான்..பயனரின் பதிவு வைரல்!