விளையாட்டு

களிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்

களிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்

webteam

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போடியில் ஜோக்கோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் ‌9 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோக்கோவிச்சை வீழ்த்தி மீண்டும் பட்டத்தை வென்றுள்ளார். முன்னதாக அரை இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

இதனைதொடர்ந்து இறுதிப்போட்டி ரோம் நகரில் நேற்று நடைபெற்றது. முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொண்டார். முதல் நிலை வீரர்கள் இருவரும் பங்கேற்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறுதிப்போடியின் முதல் சுற்றை 6-0 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து ஆடிய ஜோக்கோவிச் 6-4 என்ற கணக்கில் இரண்டாம் சுற்றைக் கைப்பற்றினார். 


சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், விறுவிறுப்பான இறுதி சுற்றில் 6-1 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றினார். இதனையடுத்து ரபேல் நடால் வெற்றி பெற்றார். இத்தாலி ஓபன் தொடரில் ‌9 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, ‌களிமண் களங்களில் தான் 'கிங்' என்று மீண்டும் ரபேல் நடால் நிரூபித்துள்ளார்.