விளையாட்டு

இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மீது இனவெறி விமர்சனம்: குவியும் கண்டனங்கள்

இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மீது இனவெறி விமர்சனம்: குவியும் கண்டனங்கள்

jagadeesh

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் மீதான இனவெறி கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இதில் மார்கஸ், ஜடோன் சாஞ்சோ, சாகா ஆகிய மூன்று வீரர்கள் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனையடுத்து இந்த மூன்று வீரர்கள் மீதும் இனவெறி கருத்துகளை பதிவிட்டு அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் இங்கிலாந்தில் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் வீரர்களில் ஒருவரான மார்க்ஸ் ராஷ்போர்ட் ரசிர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்