விளையாட்டு

அதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்

அதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்

webteam

அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந் தது. மார்க்ரம் 3 ரன்னுடனும் தியூனிஸ் டி புருயின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார். 

அதாவது இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இன்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதர னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அவர் முரளிதரனை முந்தி சாதனை படைப்பார்.  

இதற்கிடையே, அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.