விளையாட்டு

தேர்வில் கோலி குறித்த கேள்வி: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தேர்வில் கோலி குறித்த கேள்வி: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்த கேள்வி மேற்குவங்க பள்ளி தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. முன்னாள் கேப்டன் தோனி விட்டுச்சென்ற இடத்தில் இருந்து அணியை வழிநடத்தி வருகிறார் கோலி. கடந்தாண்டு இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி வெளிநாட்டு மண்ணிலும் தொடர் வெற்றிகளை குவித்து அசத்தியது. கோலியின் அதிரடியான போக்கும் தோனியின் ஆலோசனையும் அணிக்கு உதவி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கோலி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வில் கோலி குறித்தக் கேள்வியைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும் கேட்கப்பட்டது 10 மதிப்பெண் வினா. அதில் கோலி குறித்து கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளனர். சும்மாவே நமது மாணவர்கள் கட்டுரை தீட்டுவார்கள் கோலி குறித்த கேள்வி என்றால் சொல்லவா வேண்டும்.

இதுதொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், தேர்வில் கோலி குறித்தக் கேள்வி கேட்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. அவர் இந்தியாவின் ஓர் அடையாளம், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர். கோலி குறித்து கேள்வி கேட்கப்பட்டது மகிழ்ச்சி. அதில் சில தகவல்கள் இருந்ததால் பதில் எழுதுவதற்கு அவ்வளவு சிரமமானதாக இல்லை எனத் தெரிவித்தனர்.