2022-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏழாவது மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டது.
2022-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அரேபிய நாடான கத்தார் நடத்துகிறது. கால்பந்து போட்டிக்கான ஏழாவது மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டுள்ளது. ராஸ் அபு நகரில் முற்றிலும் நவீனமயமாக இந்த மைதானம் கட்டப்படுகிறது. 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது. கப்பல் சரக்கு பெட்டகம் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த மைதானம் கட்டப்படுகிறது. மைதானத்தின் பணிகள் வரும் 2020-ஆம் நிறைவடையும் என போட்டி அமைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.