கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் தடகள போட்டியில் 22 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இன்று தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் பரிசுக் கோப்பைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் போட்டிகள் கடந்த 14ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் 18 தங்கம் 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 25 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.
இதேபோல் நீச்சல் போட்டியில் நான்கு தங்க பதக்கங்கள் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் 32 பதக்கங்களை பெற்று தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
இது மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அந்த வீரர், வீராங்கனைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தாங்கள் பெற்ற பரிசு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துகளை பெற்றனர்.
அப்போது அரசின் பிரதிநிதிகள் முன்னிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் கூறினார்.