சென்னையில் நாளை நடைபெறவுள்ள புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையுறுதியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் மற்றும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியில், ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சிறப்பாக விளையாடி சென்னை அணி அரை இறுதி வரை முன்னேறியுள்ளது. ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதி வருகின்றன.
சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்,தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில் இடம்பெற வைத்திருக்கிறது சென்னை அணி. இந்த அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கு இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருக்கிறார். அணிக்கான வீடியோ புரோமோ பாடலை ‘கீ ’படத்தின் இயக்குனரான காலிஸ் இயக்கியிருக்கிறார். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இந்நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியை, உள்ளூர் ரசிகர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.