மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பிரித்வி ஷாவை பல்வேறு வீரர்களுக்கு பாராட்டியுள்ளனர்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அறிமுக வீரராக மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா சேர்க்கப்பட்டார். முதல் போட்டியிலேயே எல்லோரையும், திரும்பி பார்க்க வைத்துவிட்டார். ஒரு சாயலில் சச்சின் டெண்டுல்கரை பார்த்தது போல் இருந்தார் பிரித்வி ஷா. அவரது ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவர் விளையாடியது முதல் போட்டியை போல் இல்லை. அதுவும் 99 பந்துகளில் சதம் விளாசி மிரட்டி விட்டார். மிகவும் இளம் வயதில் சதம் அடித்த வீரராக ஜொலித்துள்ளார்.
15வது இந்திய வீரராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார் பிரித்வி ஷா. அவருக்கு முன்பாக லாலா அமர்நாத், தீபக் ஷோதன், கிரிபால் சிங், அப்பாஸ் அலி பாய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவின் அம்ரே, சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா உள்ளிட்டோர் அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளனர்.
பிரித்வி ஷா சதத்தில் சில ரெக்கார்டுகள்:-
பிரித்வி ஷா 18 வருடம் 329 நாட்களில் சதம் அடித்துள்ளார்.
14வது இந்திய வீரராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இந்திய அளவில் இரண்டாவது இளம் வீரராகவும், உலக அளவில் 7வது வீரராக சதம் அடித்துள்ளார்
சச்சின் 17 வருடம் 107 நாட்களில் சதம் அடித்துள்ளார்
100 பந்துகளுக்கு உள்ளாக அறிமுக போட்டியில் சதம் அடித்த மூன்றாவது வீரர்
சச்சின் பாராட்டு மழையில் பிரித்வி ஷா:-
அறிமுக ஆட்டத்தை சதம் விளாசிய பிரித்வி ஷாவை பலரும் பாராட்டியுள்ளனர். சச்சின் தனது ட்விட்டரில், “முதல் இன்னிங்சில் இப்படியொரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பயமில்லாத பேட்டிங்கை தொடருடங்கள் பிரித்வி ஷா” குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வீரேந்திர சேவாக்கும் பிரித்வி ஷாவை பாராட்டியுள்ளார்.
2014ம் ஆண்டே சச்சின் கைகளில் பிரித்வி ஷா சிறந்த இளம் வீரருக்கான விருதினை பெற்றிருக்கிறார். சச்சினிடம் பிரித்வி ஷா பாராட்டு சான்றிதழ் வழங்கிய படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.