விளையாட்டு

"வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்" 48 வயதில் அசாதாரண கேட்ச் பிடித்த பிரவீன் தாம்பே !

"வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்" 48 வயதில் அசாதாரண கேட்ச் பிடித்த பிரவீன் தாம்பே !

jagadeesh

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியொன்றில் ட்ரின்மாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் 48 வயதான இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் தாம்பே அசத்தலான கேட்ச் பிடித்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

பிரவின் டாம்பே 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதே அவர் குறித்த பரபரப்பாக பேசப்பட்டது. 48 வயது வீரரான அவரை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தேர்வு செய்து இருந்தது. அவர் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் ஆடி உள்ளார். பிரவீன் தாம்பே உள்ளூர் முதல்தர அல்லது லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாத வீரர். அவர் ஐபிஎல் தொடரில் தனது 41 ஆவது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் அடி உள்ளார். இடையே ஐபிஎல் வாய்ப்புக்களின்றி இருந்தார். ஆனால் 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கியது. எனினும், அவர் பிசிசிஐ அனுமதியின்றி அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஆடியதால் அவருக்கு ஐபிஎல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனையடுத்து கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தங்கள் அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தேர்வு செய்தது.

இந்நிலையில் நேற்று செயின்ட் கீட்ஸ் இடையிலான போட்டியின்போது ஒரு இளம் வீரரைப் போல கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் பிரவீன் தாம்பே. மேலும் அந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 48 வயதான பிரவீன் தாம்பே இத்தகைய அசத்தலான கேட்ச் பிடித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பலரும் வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும்தான் என கூறி அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.