விளையாட்டு

யூரோ கோப்பை: பெல்ஜியம், செக் குடியரசு அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி

யூரோ கோப்பை: பெல்ஜியம், செக் குடியரசு அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி

jagadeesh

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. பெல்ஜியம், செக் குடியரசு அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புடாபெஸ்ட் நகரில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் 55ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் லிஜிட் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். பின்னர் செக்குடியரசு அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

மற்றொரு போட்டியில் சமபலம் கொண்ட பெல்ஜியம் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் இரு அணி வீரர்கள் மாறி மாறி பந்தை வலைக்குள் அனுப்ப போராடினர். 42ஆவது மிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹசார்டு கோல் அடித்து அணியை முன்னிலைபெறச் செய்தார். தனக்கு கிடைத்த இரண்டு ஃப்ரி கீக் வாய்ப்பை கோலாக மாற்ற ரொனால்டோ தவறினார்.

மேலும் கோல் அடிக்க போர்ச்சுக்கல் வீரர்கள் மேற்கொண்ட உத்திகள் பலன் அளிக்காததால் 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி தொடரில் இருந்து வெளியேறியது.