விளையாட்டு

இதய நோயால் அவதியுற்ற குழந்தை: ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனையின் மனித நேயம்

இதய நோயால் அவதியுற்ற குழந்தை: ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனையின் மனித நேயம்

jagadeesh

குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெக்கின் மனித நேய சேவைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

போலந்தைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா, அண்மையில் நடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பணம் திரட்ட முடியாமல் அந்த சிறுவனின் தாய் கஷ்டப்பட்டத்தை அறிந்து, தனது பதக்கத்தை ஏலம் விடுவதாக மரியா அறிவித்திருந்தார்.

குழந்தையின் உயிரைவிட பதக்கம் ஒன்றும் பெரிதல்ல என பெருந்தன்மையுடன் அவர் கூறியிருந்த நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த ஜாப்கா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பதக்கத்தை சுமார் 93 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. எனினும் மரியாவின் மனிதநேய சேவையை பாராட்டும் வகையில் அந்த பதக்கத்தை அவரிடமே திருப்பிக்கொடுத்தது.