விளையாட்டு

தவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி!

தவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி!

webteam

’தவறு செய்வது மனித இயல்புதான், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் கரண்ஜோஹரின்  ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பெரும் பிரச்னையானது. இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் நாடு திரும்பினர். 

இந்நிலையில், பாண்டியா, ராகுல் பேசியது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, ‘’ மனிதர்கள் தவறு செய்வது இயல்பான து. பாண்டியாவும், கே.எல்.ராகுலும் மனிதர்கள்தான். இதை நீண்ட நாள் வளர்க்கத் தேவையில்லை. யார் தவறு செய்திருந்தாலும், நிச்சயம் வ ரு ந்துவார்கள். திருந்தி சிறந்தவர்களாக மாறுவார்கள்.

எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க நாம் ஒன்றும் இயந்திரம் இல்லை. உணர்வுள்ள மனிதர்கள். மீண்டும் இது நடைபெறக் கூடாது என நாம் அதை கடந்துவிட வேண்டும். ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நேர்மையான வர்களே’’ என்றார்.