Paris Olympic pt desk
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியா இன்று களமிறங்கும் போட்டிகள் என்னென்ன?

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் இன்றைய தினம் இந்தியா அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்து பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: சந்தானம்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் இரண்டாவது நாளான இன்று இரண்டு பதக்க போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெற்றிபெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர் மாலை 3.30 மணிக்கு விளையாட உள்ளார். அதேபோல வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதியில் விளையாட உள்ளது.

2024 olympics

இதனை தவிர இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று தன்னுடைய முதல் சுற்று போட்டியில் விளையாட உள்ளார். பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய், லகயா சென் இரவு 8.00 மணிக்கு விளையாட உள்ளனர். அதேபோல குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரீன், தமிழகத்தை சார்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், 10 மீட்டர்  AIR RIFFLE மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர்  AIR RIFFLE ஆண்கள் தகுதிச்சுற்றில் சந்தீப் சிங், அர்ஜுன் பபுடா பிற்பகல் 2.45 மணிக்கு விளையாடுகின்றனர். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பிற்பகல் 2.15 மணிக்கு பங்கேற்கின்றனர். படகு வலித்தல் (ஸ்கல்ஸ்) ரெபசேஜ் சுற்றில் பல்ராஜ் பன்வார் பகல் 1.06 மணிக்கு களம் காண்கிறார். மாலை 5.45 மணிக்கு நடைபெறும் வில்வித்தை பெண்கள் குழு காலிறுதி சுற்றில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் விளையாட உள்ளனர்.

india olympic

100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி ஆண்கள் தகுதிச்சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் மாலை 4.00 மணிக்கு களமிறங்குகிறார். இதேபோல் ஃபிரீஸ்டைல் நீச்சல் போட்டி பெண்கள் 200 மீட்டர் பிரிவில் தினிதி தேசிங்கு விளையாட உள்ளார்.