அதிரடி ஆட்டக்காரனான ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணனான குணால் பாண்ட்யா தனது வருங்கால மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்டுள்ள ஃபோட்டோ ஷுட் இணையத்தில் வைரலாகி வருகின்றன,
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக திகழ்ந்து வருகிறது. கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரபலமான வீரர்கள் அடுத்தடுத்து கல்யாண பந்தத்தில் இணைந்து வருகின்றனர். கேப்டன் விராத் கோலி தொடங்கி புவனேஷ்வர்குமார், ஜாகீர் கான் என ஒவ்வொருவராக க்ளின் போல்டாகி தனது காதலியை, தோழியை கரம்பிடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது, மும்பை இந்தியன் அணியைச் சேர்ந்த குணால் பாண்ட்யாவும் இணைந்துள்ளார். அதிகமான பெண் ரசிகர்களைக் கொண்டுள்ள இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணான இவர், தனது காதலி பன்ங்குரி சர்மாமை கரம் பிடிக்க உள்ளார்.
இவர்களது, திருமணம் இந்த மாதம் 27 ஆம் தேதி, மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருமண தம்பதிகள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஃபோட்டோ ஷூட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த ஷூட்டில் இருவரும் விதவிதமான முறையில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். கருப்பு - வெள்ளை நிற தேர்வில் ஜோடிகள் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புகைப்படங்களை குணால் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.