விளையாட்டு

உலகக்கோப்பை ஃபைனலில் மோசமான ரெக்கார்ட்.. 2ம் இடத்தில் பாகிஸ்தான்! முதலிடத்தில் யார்?

உலகக்கோப்பை ஃபைனலில் மோசமான ரெக்கார்ட்.. 2ம் இடத்தில் பாகிஸ்தான்! முதலிடத்தில் யார்?

Rishan Vengai

2022 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து, பைனல் போட்டிகளில் இரண்டாவது குறைவான ரன்களை எடுத்த அணியாக பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சாம் கரன் மற்றும் அடில் ரசீத் இருவரின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்களில் வெறும் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 32 ரன்கள் மற்றும் ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தனர்.

இந்நிலையில், உலகக்கோப்பையின் இறுதிபோட்டியில் மிகவும் குறைவான ரன்களை எடுத்த அணியாக இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது பாகிஸ்தான் அணி. அப்படி எந்த அணி தான் அதற்கும் குறைவான ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறது என்று பார்த்தால், வேறு எந்த அணியும் இல்லை இந்திய அணி தான்.

2014 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 130 ரன்களை மட்டுமே அடித்தது. இறுதிவரை போராடிய இந்திய அணியின் விராட்கோலி 77 ரன்கள் அடித்ததால் 130 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. 18ஆவது ஓவரில் இலக்கை அடைந்து சாம்பியன் ஆனது இலங்கை அணி. இந்திய அணிக்கு பிறகு 137 ரன்களை எடுத்து குறைவான ரன்கள் எடுத்த இரண்டாவது அணியாக பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.

இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணியாக, நியூசிலாந்து அணி கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் 172 ரன்கள் எடுத்திருந்தது இருக்கிறது. அந்த போட்டியில் மிட்சல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் அரைசதம் அடிக்க சாம்பியன் ஆனது ஆஸ்திரேலிய அணி.