பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்பராஸ் அஹ்மத்.
பின்னர் அணியிலிருந்தே நீக்கப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலம் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக இணைந்துள்ள சர்பராஸ் அஹமத் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பேட்ஸ்மேனுக்கு தேவைப்பட்ட ஷுவை அவர் சுமந்து சென்றதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சர்பராஸ் அஹ்மத் பாகிஸ்தானுக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டன் என்பதும் குறிப்பிடத்தகக்கத்து.
‘இது நடந்திருக்கவே கூடாது. இது டீம் ஸ்பிரிட்டே அல்ல’ என தனது கண்டனத்தை பதிவு செத்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் ரஷீத். பாகிஸ்தானின் அக்தரும் இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.