இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் விளையாடியும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் அல்லது அவராவே விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் சக வீரரின் காதலியுடன் மெசேஜ் மற்றும் வீடியோ காலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் வீடியோக்களும் ஃபோட்டோக்களும் வாட்ஸ் அப் உரையாடல்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.
அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர் ஒருவரின் காதலியுடன் பேசிய போது, “நீ அடிக்கடி என்னுடன் இப்படி பேசி வந்தால் உன் காதலனை அணியில் இருந்து தூக்க மாட்டேன்” என்று பாபர் அசாம் உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மற்றொரு வீரர் யாரென்றும் தெரியவில்லை.
பாபர் அசாம் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வீடியோ, ஃபோட்டோவில் இருந்து பாபர் அசாமாக இருக்காது. மார்ஃபிங் செய்து போலி வீடியோவை பரப்பி சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள், இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை என்னவென்று அம்பலமாகும் என கூறி வருகிறார்கள்.
பாபர் அசாம் இப்படியான சர்ச்சையில் இதற்கு முன்பும் சிக்கியிருக்கிறார். அப்போது ஹமிசா முக்தர் என்ற பெண், தன்னிடம் பாபர் அசாம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததோடு மிரட்டியதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பப்ளிசிட்டிக்காக இப்படியான அவதூறை பரப்பியதாக புகார் கொடுத்த பெண் வாக்குமூலம் கொடுத்ததால் வழக்கை வாபஸ் பெற்றார். இதனால் அந்த பிரச்னைக்கு அப்போது முழுக்கு போடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சக வீரரின் காதலியுடன் பாபர் அசாம் ஆபாசமாக பேசியதாக பரவும் பதிவுகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரும் சலசலப்பு உண்டாகியிருக்கிறது.