விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுடனான கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் தீவிரம்

jagadeesh

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த நிலையில் திட்டமிட்டபடி மேற்கிந்திய தீவுகளுடனான தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டி வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகிய நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் அக்டோபர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனிடையே டிசம்பரில் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்னரே திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி தொடரை சுமூகமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், அடுத்தாண்டு திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்திற்கு அது வழிவகுக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.