விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி

webteam

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டர் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடர் இன்று பர்மிங்காமில் தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தரவரிசையில் முதல் 32 இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா ஆகியோரும் இடம்பெற்றனர். 

ஆண்கள் பிரிவில் இந்தியாவில் ஸ்ரீகாந்த் பங்கேற்றுள்ளார். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.49 லட்சம் பரித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.52 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில் தென்கொரிய வீராங்கனை சங்ஜி ஹயூனை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் ரவுண்டில் 21-16 என்ற கணக்கில் சிந்து தடுமாறினார். அடுத்த சுற்றில் 20-22 என்ற கணக்கில் தனது திறமையை காட்டினார். 

ஆனால் 3வது சுற்றில் 21-18 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். தொடக்கத்திலேயே சிந்து தோற்றது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. சங்ஜி ஹயூன், கடந்த ஆண்டே ஹாங்காங் ஓபனில் சிந்துவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.