விளையாட்டு

மொயின் அலி ஹாட்ரிக்… தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இங்கிலாந்து

மொயின் அலி ஹாட்ரிக்… தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இங்கிலாந்து

webteam

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 175 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 313 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 492 ரன்களை நிர்ணயித்தது. பெரிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 77.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க வீரர் டீன் எல்கர் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையை மொயின் அலி பெற்றார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நூறாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.