விளையாட்டு

வீரர்களை உற்சாகப்படுத்த கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து வந்த கோலி

வீரர்களை உற்சாகப்படுத்த கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து வந்த கோலி

Rasus

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி வலது தோல்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. விராத் கோலி இல்லாத நிலையில், ரகானே கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் முதல் நாள் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த சக வீரர்களுக்கு விராத் கோலி குளிர்பானங்களை கொண்டு வந்தார். மேலும், அவர், வீரர்களிடம் பேசுவதையும் பார்க்க முடிந்தது.

விராத் கோலி முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்றாலும் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார். இந்திய அணியில் அவர் இருப்பது சக வீரர்கள், ஆஸ்திரேலியாவை மன ரீதியாக எதிர்கொள்ள உதவும் என்றும் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாத நிலையில், வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க, கேப்டன் விராத் கோலி எடுத்த இந்த முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

காயம் காரணமாக விராத் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறை. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை தொடர்ந்து 54 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.