விளையாட்டு

ஆஸியுடன் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

ஆஸியுடன் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

webteam

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னையில் நாளை நடைபெறுகிறது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்வன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில், இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் சேப்பாக்த்தில் நா‌ளை களம் காண்கின்றன. 


சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று திரும்பியது. இதனால், ஆஸி அணியையும் இந்திய அணி வாஷ் அவுட் ஆக்குமா? என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலியா மிகவும் பலம் பொருந்திய அணி என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆஸியை வீழ்த்துவதில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை விளையாடியுள்ள 11 ஒருநாள் ‌கிரிக்கெட் போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.