இந்திய மல்யுத்த வீராங்கனை Facebook
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனை! நடவடிக்கை எடுத்த ஒலிம்பிக் கமிட்டி!

PT WEB

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனை மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கிராமத்திற்குள் வீரர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதி என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்காலின் சகோதரி மீறியதாக புகார் எழுந்தது.

விசாரணையில் மல்யுத்த வீராங்கனையான அன்டிம் பங்கால் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்காக வழங்கப்பட்ட அனுமதி சீட்டை அவரது சகோதரி முறைகேடாக பயன்படுத்தியது அம்பலமானது.

இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி அன்டிம் பங்காலுக்கு பாரிஸ் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேசமயம், அன்டிம் பங்கால் மற்றும் அவரது சகோதரியை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை சர்ச்சை காரணமாக தங்கம் வெல்லும் இறுதிச்சுற்றில் பங்கேற்க முடியாத நிலையில், மற்றொரு வீராங்கனை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.