பாரிஸ் ஒலிம்பிக் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக் 10-வது நாள்| இந்திய வீரர்கள் களமிறங்கும் போட்டிகள் என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் இன்று விளையாடுகிறார். இதேபோல் இந்தியா பங்கேற்கும் மற்றப் போட்டிகளை காணலாம்.

PT WEB

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் இன்று விளையாடுகிறார். இதேபோல் இந்தியா பங்கேற்கும் மற்றப் போட்டிகளை காணலாம்.

  • இன்று நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஆனந்த் ஜீத், மகேஷ்வரி சவுகான் விளையாடுகின்றனர்.

  • பகல் ஒரு மணிக்கு இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி, ருமேனியா அணியை எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறது.

  • பிற்பகல் 3.25 மணிக்கு நடைபெறும் 400 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கிரண் பாஹல் பங்கேற்கிறார்.

  • அதனை தொடர்ந்து. 3.45 மணிக்கு நடைபெறும் பாய்மரபடகுப் போட்டி மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன் விளையாடுகிறார்.

  • மாலை 6.10 மணிக்கு நடைபெறும் பாய்மரபடகுப் போட்டி ஆடவர் பிரிவில் விஷ்ணு சரவணன் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு நடைபெறும் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவின் லீ சீ ஜியாவை, இந்தியாவில் லக்ஷயா சென் எதிர்கொள்கிறார்.

  • மாலை 6.30 மணிக்கு மல்யுத்தம் போட்டியில் 68 கிலோ எடை மகளிர் பிரிவில் இந்தியாவின் நிஷா தையா, உக்ரைன் வீராங்கனையை எதிர்த்து விளையாடுகிறார்.

  • இரவு 10.30 மணிக்கு நடைபெறும் 3,000 மீட்டர் STEEPLECHASE போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே களம்காண்கிறார்.