வினேஷ் போகட் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகட் வழக்கு | இரு தரப்புக்கும் கெடு விதித்த சர்வதேச தீர்ப்பாயம்! தள்ளிப் போகிறதா தீர்ப்பு?

தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மீது வரும் 13 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மீது வரும் 13 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் முன்னேறியிருந்தார். ஆனால், உடல் எடை சர்ச்சை காரணமாக வினேஷ் போகட் இறுதி நிமிடத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பல விளையாட்டு வீரர்கள் குரல் கொடுத்தனர்.

இதற்கிடையில், தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டுமென சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகட் மேல்முறையீடு செய்தார்.

விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த விவகாரத்தில் வரும் 13ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இரண்டு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க சர்வதேச தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. தரப்படும் ஆவணங்களை கொண்டு ஆய்வுகளை நடத்திய பின் இறுதி முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.