வினேஷ் போகத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் தகுதி நீக்கம்| தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு.. நிராகரித்த வினேஷ் போகட்!

Prakash J

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகட், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ராகுலுடன் பஜ்ரங் புன்யா, வினேஷ் போகத்

ஆனால், இதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தாயகம் திரும்பிய பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவருடைய சொந்த மாநிலமான ஹரியானாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெற்ற வினேஷ் போகட், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதி போட்டியிடுகிறார்.

இதையும் படிக்க: நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ராகுலின் வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள்..அன்று கோவையில் நடந்தது என்ன?

இந்த நிலையில், நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வினேஷ் போகட் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”நான் வினேஷ் போகட்டிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறினேன். ஆனால் அவரோ, ’இந்த விவகாரத்தை மேற்கொண்டு பெரிதுபடுத்த விரும்பவில்லை’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, “இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மெத்தனமாகச் செய்யப்பட்டனர்” எனவும் வினேஷ் போகட் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க; ஜிம்பாப்வே| நிதியை அள்ளித்தரும் ஐசிசி.. நீர்வீழ்ச்சி அருகே அமைய இருக்கும் புதிய மைதானம்!