வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத் வழக்கு| மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? விளக்கம் தந்த வழக்கறிஞர்!

வினேஷ் போகத் வழக்கு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Prakash J

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முன்னதாக நடைபெற்ற விசாரணையில் இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியின்போது அவரின் எடை சரியாக இருந்தது என்றும், இறுதிப் போட்டியின் முன்னதாகதான் எடை கூடியதால், தகுதி நீக்கம் செய்தது தவறு எனவும் அவரது தரப்பில் ஆஜரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார். எனவே, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.

இச்சூழலில் வினேஷ் போகத் வழக்கில் விளையாட்டு நடுவர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், எதற்காக இந்த வழக்கு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒலிம்பிக்கில் தோல்வி| பேட்மிண்டன் வீரரை விமர்சித்த பயிற்சியாளர்.. ஆதரவு தெரிவித்த சுனில் கவாஸ்கர்!

இந்த வழக்கு தொடர்பாக வினேஷ் போகத் தரப்பு மூத்த வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா, "நாங்கள் அனைவரும் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். CAS-இன் தற்காலிகக் குழு 24 மணிநேர காலக்கெடுவைக் கொண்டுள்ளது. அவர்கள் தீர்ப்பின் காலக்கெடுவை நீட்டித்திருப்பதால், இதுகுறித்து தீவிரமாக சிந்திப்பார்க்கள். நடுவர் மன்றம் இந்த விஷயத்தில் அதிகம் சிந்திக்கிறது என்றால், அது நமக்கு நல்லது. கடந்தகாலங்களில் நான் CASஇல் பல வழக்குகளில் வாதாடி உள்ளேன்.

வினேஷ் போகத்

CASஇல் வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவு. இந்த விஷயத்தில், நாங்கள் நடுவரிடமிருந்து மிக முக்கிய முடிவை எதிர்பார்க்கிறோம். இது கொஞ்சம் கடினம்தான். ஆனால் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். நாம் அனைவரும் வினேஷுக்காக பிரார்த்தனை செய்வோம். அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்று நம்புவோம். ஒருவேளை, அவர் அதைப் பெறாவிட்டாலும், அவர் ஒரு சாம்பியன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!