வினேஷ் போகத் ட்விட்டர்
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், தேவையான எடையை விட கூடுதலாக 150 கிராம் எடை இருப்பதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக தனக்கு முன் இருந்த வீராங்கனைகளை எல்லாம், அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் தனது வலிமையால் நேற்றைய தினம் தோற்கடித்த வினேஷ் போகத், இறுதி போட்டிற்கு கம்பீரமாக நுழைந்திருந்தார்.

இந்தவகையில், தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்றதால், அவர் எடுத்துக்கொண்ட ஊட்டசத்துக்கள் காரணமாக, நேற்று இரவு முதலே தோராயமாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் செய்து உடல் எடையை குறைக்க முயன்றுள்ளார். இந்த தொடர் பயிற்சியால்... ஒரே இரவில் 1.85 கிலோ உடல் எடையை வினேஷ் குறைத்ததாக கூறப்படுகிறது.

அப்படி அவர் மேற்கொண்ட தீவிர பயிற்சியால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இன்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன?

  • ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரின் பதக்க கனவு பறிபோனது.

  • தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு எந்த பதக்கமும் கிடைக்காது.

  • வீராங்கனைகளின் தரவரிசையில் கடைசி இடத்துக்கு அவர் தள்ளப்படுவார்.

  • அமெரிக்க வீராங்கனை சாராவும், அரையிறுதியில் தோற்ற கியூபா வீராணையும் தங்கப்பதக்கத்துக்கு விளையாடுவர்.

  • முன்னதாக வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது எனக் கூறப்பட்ட நிலையில், கியூபா மற்றும் அமெரிக்க வீராங்கனைகள் தங்கள் மற்றும் வெள்ளிக்காக போட்டியிடுவர். அடுத்த நிலையிலுள்ள இரு வீராங்கனைகள், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஈடுபடுவர்.