செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம்.. 37 வயதில் அசத்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்!

PT WEB

ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப்பதக்கத்தை நட்சத்திர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

போட்டியின் தொடக்கம் முதல் இருவரும் மாற்றி மாற்றி புள்ளிகளை குவிக்க தொடங்கினர். இதனால், போட்டியில் விறுவிறுப்பு தொற்றியது. இருப்பினும் 7க்கு 6, 7க்கு 6 என்ற நேர் செட்களில் மிகவும் போராடி ஜோகோவிச் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

37 வயதான ஜோகோவிச் முதல் முறையாக தங்கப்பதக்கத்தை வென்றதோடு, அதிக வயதில் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். கார்லஸ் அல்கராஸ் வெள்ளி வென்றதன் மூலம் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தையும் கைப்பற்றினார்.