பாரிஸ் ஒலிம்பிக் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் | சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் அமெரிக்கா! மற்ற நாடுகள் எந்தெந்த இடத்தில் உள்ளது?

PT WEB

ஒலிம்பிக் போட்டிகளின் 9 ஆம் நாள் முடிவில் இந்தியா 3 வெண்கலத்துடன் 57 ஆவது இடத்தில் உள்ளது.

சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 9 ஆம் நாள் முடிவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 19 தங்கம், 26 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. அடுத்த படியாக 19 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் சீனா 2 ஆவது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 44 பதக்கங்கள் பெற்று 3 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 12 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்கள் பெற்று 4 ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தியா 3 வெண்கலப்பதக்கத்துடன் 57 ஆவது இடத்தில் உள்ளது.

முழுவிபரத்தை அறிய ஒலிம்பிக் பக்கத்தில் காணவும்.. https://olympics.com/en/paris-2024/medals