பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குரூப் சுற்றில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் பிங் ஜியாயோவை எதிர்கொண்டார்.
தொடக்கத்தில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்ததால், போட்டியில் உற்சாகம் கூடியது. இருப்பினும் 21க்கு 19, 21க்கு 14 என்ற நேர் செட்களில் பிங் ஜியாயோ வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளியும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும் வென்று கொடுத்த பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.